மகாகொடயாயவில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 11 பயணிகள் காயம்!

மகாகொடயாய – சமகம்கிராம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லவாயிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து அதன் பின்புறத்தில் பலமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 11 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலைமையைக் கருத்திற் கொண்டு மேலதிக சிகிச்சைக்காக சிரிகல மகா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், சிகிச்சையிலிருப்பவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: