இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி (Commercial Bank), கொழும்பில் உள்ள தங்களது சில்லறை விற்பனைக் குழுவில் (Retail Sales Team) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான இருபால் விண்ணப்பதாரர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
பதவி: * சில்லறை விற்பனை உதவியாளர் (Retail Sales Associate – Fixed Term Contract)
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
- வயது எல்லை: 22 முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- கல்வித் தகுதி: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் (G.C.E O/L) ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் (Edexcel அல்லது Cambridge O/L தகைமைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்).
- மொழித் தகுதி: தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் சிறந்த எழுத்து மற்றும் பேச்சுத் திறனுடன், ஆங்கில மொழியிலும் போதிய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: விற்பனைத் துறையில் (Sales) 2 வருட அனுபவம் இருப்பது கூடுதல் நன்மையாகக் கருதப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கொமர்ஷல் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- www.combank.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.
- அதில் Careers பக்கத்திற்குச் செல்லவும்.
- பின்னர் Open Positions என்பதைத் தெரிவு செய்யவும்.
- அங்குள்ள Retail Sales Associate என்ற பகுதியின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள் மற்றும் கொடுப்பனவுப் பொதிகள் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
💼 கொமர்ஷல் வங்கியில் வேலைவாய்ப்பு! இலங்கையின் முன்னணி வங்கியான கொமர்ஷல் வங்கியில் கொழும்பு கிளையில் பணிபுரிய ‘Retail Sales Associate’ பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 22 – 35 வயதிற்குட்பட்ட, ஓ-லெவல் தகைமையுடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் செய்தியில்…👇




