2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து 66 மாணவர்கள் தோற்றி இதில் 59 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்த நிகழ்வு நேற்று தினம் (22) ஆராதனையில் அதிபர் திருமதி து.குணரத்ன தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்விற்கான பங்களிப்பை பாடசாலையின் உதவி அதிபர்கள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழங்கி இருந்தனர்.
குறித்த பாடசாலையில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் 89% ஆக காணப்படுவதுடன் இரண்டு மாணவர்கள் 9A சித்திகளையும் பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு இந்நிலையினை பெறுவதற்கு வழிகாட்டிய அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளும், பாராட்டுக்களையும் பிரதேச மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்






