மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (15.05.2026) மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டன.
36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு, கல்முனை அல்-மிஸ்பாஹ் (Al-Misbah) பாடசாலை மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றன.
இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கரப்பந்தாட்டம் (Volleyball) மற்றும் கயிறு இழுத்தல் (Tug of War – வடயீர்ப்பு) ஆகிய போட்டிகள் இதில் முதன்மையாக நடாத்தப்பட்டன. கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பல முன்னணி இளைஞர் கழகங்கள் இதில் கலந்துகொண்டு தமது திறமைகளை விறுவிறுப்பாக வெளிப்படுத்தியிருந்தன.
இவ்விளையாட்டுப் போட்டிகளானது கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் (Youth Club Federation) முழுமையான ஒத்துழைப்புடனும், வழிகாட்டலுடனும் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு, வெற்றிகரமாக நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்கள் அடுத்த கட்டமாக மாவட்ட ரீதியிலான போட்டிகளுக்கு தகுதிபெறவுள்ளனர்.











