• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சுகாதார சேவையில் சர்வதேச தரம்; இடைநிறுத்தப்பட்ட 26 திட்டங்கள் மீள ஆரம்பம்!” – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி

சுகாதார சேவையில் சர்வதேச தரம்; இடைநிறுத்தப்பட்ட 26 திட்டங்கள் மீள ஆரம்பம்!” – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி

இலங்கையின் சுகாதார சேவையை வெறும் சாதாரண சீர்திருத்தங்களுடன் நிறுத்திவிடாமல், சர்வதேச தரத்திலான உயர்தர சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்னேற்றங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவுகள் குறித்து நேற்று (08) நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

பிராந்திய அளவிலான சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய ஆரோக்கிய சுகாதார நிலையங்களை அமைப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அரச மருத்துவமனைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், பொதுமக்கள் குறைந்த செலவில் தரமான சிகிச்சைகளைப் பெற முடியும். இது தனியார் மருத்துவமனைகளை நாடுவதால் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும்.கடந்த அரசாங்கங்களால் நிதிப் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த முக்கிய திட்டங்கள் மீளத் தொடங்கப்பட்டுள்ளன.மொனராகலை மாவட்ட மருத்துவமனைக் கட்டடத் தொகுதி, திருகோணமலை, அம்பாறை மற்றும் சிலாபம் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட 26 பெரும் கட்டுமான திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தற்போது நாடு தழுவிய ரீதியில் மொத்தம் 48 மருத்துவமனை கட்டுமான திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கான அவசர ஆம்புலன்ஸ் (சுவசரிய) சேவையை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் சர்வதேச தரமும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட நோயாளர் காவு வாகனங்களை மட்டுமே கொள்வனவு செய்வதற்கு இதன்போது கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.இச்சந்திப்பின் போது ஊடக மற்றும் அஞ்சல் துறைகளை நவீனமயமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது: அனைத்து ஊடகவியலாளர்களும் அரசாங்கத்துடன் நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய வகையில் விசேட ‘ஊடக மத்திய நிலையம்’ ஒன்று உருவாக்கப்படும்.

ஊடகவியலாளர்களுக்கான தொழில்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும் மற்றும் பாடசாலை மட்டத்தில் ‘ஊடகக் கழகங்கள்’ உருவாக்கப்படும்.அஞ்சல் திணைக்களம் மற்றும் அரச அச்சகத் திணைக்களம் ஆகியவற்றை புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Share the Post: