மாணவர்களின் கண்காட்சி ஆரம்பம்

ஹஸ்பர் ஏ.எச்-

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளவக்குள சல்லிமுனை முன்பள்ளி பாடசாலையின் சிறுவர் கண்காட்சி நிகழ்வு இன்று (09)முன்பள்ளி பாடசாலையின் வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது மாணவர்களின் வினோத நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இதில் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் யூசூப் ரகுமான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களின் கைவண்ணத்தில் தயாரான பல உபகரணப்பொருட்களை இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. பாரம்பரியத்தினை எடுத்துக்காட்டும் கலை கலாசார பண்புகளை கொண்டதும் நவீனமயமான பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாணவர்களின் கண்காட்சி பொருட்கள் இங்கு வகை வகையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

Share the Post: