• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப்போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப்போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள

பாரம்பரிய விளையாட்டுப்போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரிடம் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார். 

பணிப்பாளருக்கு (14) அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணப் பாரம்பரிய விளையாட்டுப்போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மறைந்து போகும் நமது பாரம்பரியங்களைப் பாதுகாக்க இது போன்ற முயற்சிகள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

கிழக்கு மாகாண மக்களிடையே உள்ள பாரம்பரிய விளையாட்டுக்களில் சீனடியும் உள்ளது. இந்த விளையாட்டையும் இந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பாரம்பரிய விளையாட்டையும் மறைந்து போவதில் இருந்து பாதுகாக்க முடியும். 

எனவே, இந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்;கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

அனோஜன் விவகாரம்  ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் மகஜர் கையளிப்புசவூதி மரண தண்டனை அச்சுறுத்தலைத் தடுக்க இராஜதந்திரத் தலையீட்டை வலியுறுத்திச் சந்திப்பு