அரசாங்கத்தால் கொடுவரப்படவுள்ள புதிய சட்டங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தெழிவுபடுத்தும் விழிப்புணர்வு நிழ்வு சனிக்கிழமை(07.11.2026) மட்டக்களப்பில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டல் மாற்றுக் கொள்கை நிலையம் மற்றும் சமூக ஊடகப் பிரகடனக் கூட்டமைப்பினதும், அனுசரணையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஸ்ரீநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாறகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சட்டத்தரணி தனுஸ்க சில்வா மற்றும மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் சம்பத் சமரக்கோன் ஆகியோர் கலந்து கொண்டு அரசாங்கம் கொண்டு வர எத்தணிக்கும் பயங்கரவாத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத்தடுக்கும் சட்டம், மற்றும் வெளிநாடுகளிலிருந்து குற்றங்களைப்புரிகவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள சட்டங்கள், தொடர்பில் மிகவும் விரிவான விளக்கங்களும், தெழிவூட்டல்களும் வழங்கப்பட்டன.
இறுதியில் இச்சட்ட மூலங்ககளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடையங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன்னாக வைத்து கலந்து கொண்டோரால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.






