• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மஹா ஓயா, இறக்காமம் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கான புதிய உத்தியோகபூர்வ இல்லங்கள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் திறந்து வைப்பு

மஹா ஓயா, இறக்காமம் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கான புதிய உத்தியோகபூர்வ இல்லங்கள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் திறந்து வைப்பு

(நூருல் ஹுதா உமர் )

மஹா ஓயா மற்றும் இறக்காமம் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் 04ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, குறித்த உத்தியோகபூர்வ இல்லங்களை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் லியனகே, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன்புரி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்கள் தமது கடமைகளை வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் நிறைவேற்றுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சிறந்த தங்குமிட வசதிகளை மேம்படுத்தி, அவர்களின் சேவைத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மற்றுமொரு பாராட்டத்தக்க நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது.

Share the Post:

Related Posts