• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

பாறுக் ஷிஹான்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “Life City” 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின் கீழ், கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தினூடான “கல்முனை – காரைதீவு நகராக்கம்” எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பான முக்கிய ஆரம்பக் கட்ட மீளாய்வுக் கலந்தரையாடல் திங்கட்கிழமை (12) கல்முனை மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) ஏற்பாட்டில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து விரிவான உரையாடல்களை மேற்கொண்டனர்.

“Life City” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த “கல்முனை – காரைதீவு நகராக்கம்” திட்டமானது, பெரியநீலாவனை,மருதமுனை,பாண்டிருப்பு,கல்முனை,நற்பிட்டிமுனை,சாய்ந்தமருது,காரைதீவு கிழக்கிலங்கையின் முக்கிய வர்த்தக மற்றும் வாழ்விடப் பகுதிகளான பின்வரும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமையவுள்ளது:

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, நகரக் கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்த தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் கல்முனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கரையோரப் பிராந்தியங்களின் பொருளாதார, வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொறுப்புகளைப் புறக்கணித்துச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகப் பதவி நிலை பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -திருமலை மாவட்ட அரசாங்க அதிபர்