திருகோணமலை மாவட்ட,வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் மரபுவழிக் கங்காணம் கங்கை தீர்த்த படிக்கட்டு அடிக்கல் நாட்டு விழா நேற்று (10)கோயில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றன.
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம்,பிளாட்டினம் குறூப் ஒப் கம்பனியின் தலைவருமான குமார் ஜெயக்குமார் விசேடமாக பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த இந்த முக்கியமான கோரிக்கைக்கு தீர்வு காணும் முயற்சியில் பங்களிக்க முடிந்தது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

எமது இந்து சமய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், வரலாற்றுப் பெருமையையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியான கொள்கையின் அடிப்படையிலேயே இந்தப் பணியை முன்னெடுக்க நான் முடிவு செய்துள்ளேன்.
இது ஒரு கட்டுமானப் பணியாக மட்டும் இல்லாமல், எமது ஆன்மீக மரபையும், முன்னோர்களின் அடையாளங்களையும் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். இதற்காக ஒத்துழைத்த கோயில் நிர்வாகத்தினருக்கும், ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியும் எமது மக்களின் நலனுக்காகவும், எமது சமய, கலாசார, வரலாற்று மரபுகளைப் பேணிப் பாதுகாக்கவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். எனவும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட குமார் ஜெயக்குமார் தெரிவித்தார்.






