• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • 18 வயதுக்கு மேற்பட்டோர் ‘டின்’ இலக்கம் பெறுவதில் அவசரம் வேண்டாம்: வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு அறிவிப்பு!

18 வயதுக்கு மேற்பட்டோர் ‘டின்’ இலக்கம் பெறுவதில் அவசரம் வேண்டாம்: வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு அறிவிப்பு!

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ‘டின்’ (TIN) இலக்கங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடைமுறையானது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதால், பொதுமக்கள் எவ்வித அவசரமுமின்றி நிதானமாக இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே, இது குறித்துச் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகளைக் கண்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் மக்களுள் ஏற்கனவே 13 மில்லியன் பேருக்கு ‘டின்’ (TIN) இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1.2 மில்லியன் பேரே வருமான வரி செலுத்துபவர்களாகப் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவித்த அமைச்சர், மீதமுள்ள 4 மில்லியன் மக்களுக்கே இனி இந்த இலக்கம் தேவைப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பது மற்றும் வாகன அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பது போன்றவற்றின் போது உடனடி ‘டின்’ இலக்கம் இல்லாத பட்சத்தில், தேசிய அடையாள அட்டையைப் (NIC) பயன்படுத்தி அச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான தற்காலிகத் தளர்வுகள் மற்றும் புதிய வழிகாட்டல்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் (IRD) வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share the Post:

Related Posts