அநுராதபுரம் பிரதான பஸ் நிலையம் பயணிகளுக்குத் தேவையான அதிநவீன வசதிகளுடன் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தூர இடங்களிலிருந்து வருகை தரும் மற்றும் உள்ளூர் பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, இந்த பஸ் நிலையம் சகல நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடனும் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பயணிகளுக்கான நவீன காத்திருப்பு மண்டபங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், சுத்தமான சுகாதார வசதிகள், நவீன வர்த்தக நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் தகவல் பலகைகள் உள்ளிட்ட பல விசேட பொதுநல வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்புதிய வசதிகள் மூலம் அநுராதபுரத்திற்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் அன்றாடப் பயணிகள் அனைவரும் பெரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



Views: 94




