• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நுவரெலியாவில் தேவாலய உணவு ஒவ்வாமையால் 8 பேர் திடீர் விபத்து: மருத்துவமனையில் அனுமதி

நுவரெலியாவில் தேவாலய உணவு ஒவ்வாமையால் 8 பேர் திடீர் விபத்து: மருத்துவமனையில் அனுமதி

நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர், திடீர் ஒவ்வாமை (Food Poisoning) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 8 பேரும் தேவாலயத்தில் வழங்கப்பட்ட முட்டை அடங்கிய சோறு பொதியினை (Egg Fried Rice) உட்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. உணவை உட்கொண்ட சில மணித்தியாலங்களில் இவர்களுக்கு வாந்தி, கடுமையான வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர்களின் உடல்நிலை சற்று தேறிவருவதாகவும், உயிராபத்துக்கள் எதுவும் இல்லை எனவும் மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து மற்றும் உணவு ஒவ்வாமைக்கான சரியான காரணம் குறித்து நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: