வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த பல வருடங்களாக அரச கட்டிட காணிகளில் ராணுவம் தங்கி இருந்ததை தொடர்ந்து பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைய தற்போது கட்டங்கட்டமாக அவை விடுவிக்கப்பட்ட வருகின்றது
இதேவேளை மட்டக்களப்பு வலைய கல்வி திணைக்களத்திற்கு உட்பட்ட மட்.சிங்கள மகா வித்தியாலயத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தங்கி இருந்த ராணுவத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்க அமைய தற்போது அங்கு இருந்த ராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வியாழக்கிழமை (29.10.2026) அங்கு விஜயம் செய்து தற்போது பாடசாலையின் நிலைமை பற்றிய ஆராயும் முகமாக கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.
இதன்போது பாடசாலையின் தற்போதைய நிலைமை பற்றியும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி பணிகள் பற்றியும் மட்டு வலய கல்விப் பணிப்பாளர் தி.ரவி அவர்களிடம் கலந்துரையாடினார்.
பாராளுமன்ற உறுப்பினரின் இந்த விஜயத்தின் போது கல்வி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பாடசாலையின் ஆசிரியர் கலந்து கொண்டனர்







