• Home
  • உள்ளூர் செய்திகள்
  • FCID விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் புறப்பட்டார் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ!

FCID விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் புறப்பட்டார் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவர் மீதான நிதி முறைகேடு தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று FCID இல் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த திடீர் வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: