• Home
  • ஆன்மிகம்
  • மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 26ஆவது நினைவு தினம்: புதிய காத்தான்குடியில் விசேட கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனை!

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 26ஆவது நினைவு தினம்: புதிய காத்தான்குடியில் விசேட கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனை!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, விசேட கத்தமுல் குர்ஆன் பாராயணமும் துஆ பிரார்த்தனை நிகழ்வும் இன்று (16) அதிகாலை புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விசேட ஆன்மீக நிகழ்வில் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், மதத் தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு, மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மறுமை வாழ்வின் நற்பேறுகளுக்காகவும், சமூகத்தின் ஒற்றுமை மற்றும் அபிவிருத்திக்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

Share the Post: