• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கல்முனை பெரிய பள்ளிவாசலில் 887வது வருட முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

கல்முனை பெரிய பள்ளிவாசலில் 887வது வருட முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

செப்டம்பர் 23 இல் மாபெரும் கந்தூரி நிகழ்வு

பாறுக் ஷிஹான்

மெய்ஞ்ஞானம் கண்ட ஞானி, கௌதுல் அஃலம், குத்புல் அக்தாப், ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் 887வது வருட மணாகிப் மஜ்லிஸ் ஆரம்பமும், அதனையொட்டிய புனிதக் கொடியேற்ற நிகழ்வும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினத்திலிருந்து தொடர்ச்சியாக 11 நாட்களுக்கு தினமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசலில் மௌலித் பாராயணம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகளின் நிறைவாக, வரும் 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி புதன்கிழமை மாபெரும் கந்தூரி நிகழ்வு சிறப்பாக நடைபெறவுள்ளது.

இப்புனித நிகழ்வுகளில் அனைத்து முஸ்லிம்களையும் கலந்து கொண்டு, வலியுல்லாஹ்மார்களின் நல்லாசிகளையும், துஆப் பிரார்த்தனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

Share the Post: