September 14, 2026

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘கஞ்சா லேகியம்’ விற்பனை-சந்தேக நபர்  கைது

9 கிலோகிராம் லேகியம் மீட்பு: ஊழல் ஒழிப்புப் பிரிவினர் அதிரடி பாறுக் ஷிஹான்  ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை (13) பொலிஸார்  கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று  வன்னியர் வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச் சோதனை நடவடிக்கையின் போது குறித்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘கஞ்சா லேகியம்’ விற்பனை-சந்தேக நபர்  கைது Read More »

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ என உத்தியோகபூர்வ பெயர் மாற்றம்: வக்பு சபை அங்கீகாரம்!

நம்பிக்கையாளர் சபையின் நீண்டகால முயற்சிக்கு வெற்றி பாறுக் ஷிஹான் ‘R/725/AM/19’ எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல்’ எனும் கல்முனைப் பெரிய பள்ளிவாசலின் பெயர், உத்தியோகபூர்வமாக ‘கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கையாளர் சபையின் நீண்டகால முயற்சியின் பலனாக, இலங்கை வக்பு சபையின் தீர்மானத்தின்படி (WB/BP/46/2026 – 12.08.2026) இந்த உத்தியோகபூர்வப் பெயர் மாற்றத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளை ஏற்று

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ என உத்தியோகபூர்வ பெயர் மாற்றம்: வக்பு சபை அங்கீகாரம்! Read More »

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3,794 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார். பதியத்தலாவ பிரதேச செயலகப் பிரிவில் 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,910 குடும்பங்களின் 9,177 பேரும், மகா ஓயா பிரதேச செயலகப் பிரிவில் 865 குடும்பங்களின் 2,800 பேரும், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 03 கிராம

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் Read More »

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இந்து அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கல்

நூருல் ஹுதா உமர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவில் நடைபெற்றது. திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் வழிகாட்டலுக்கமைவாக, காரைதீவு பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரையடி அம்பாறைப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி, பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் சி. சிவலோஜினி, கலாசார

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இந்து அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கல் Read More »

கல்முனை பெரிய பள்ளிவாசலில் 887வது வருட முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

செப்டம்பர் 23 இல் மாபெரும் கந்தூரி நிகழ்வு பாறுக் ஷிஹான் மெய்ஞ்ஞானம் கண்ட ஞானி, கௌதுல் அஃலம், குத்புல் அக்தாப், ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் 887வது வருட மணாகிப் மஜ்லிஸ் ஆரம்பமும், அதனையொட்டிய புனிதக் கொடியேற்ற நிகழ்வும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினத்திலிருந்து தொடர்ச்சியாக 11 நாட்களுக்கு தினமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசலில்

கல்முனை பெரிய பள்ளிவாசலில் 887வது வருட முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! Read More »

கல்முனை முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் 16ஆவது இரத்ததான முகாம்

பிராந்தியத்தில் இரத்ததானப் பணியை அறிமுகப்படுத்திய முன்னோடி மஸ்ஜித் திரளானோர் பங்கேற்பு பாறுக் ஷிஹான் “இரத்ததானம் செய்வோம்; ஓர் உயிரைக் காப்போம்” என்ற உயரிய மனிதநேய நோக்குடன், கல்முனை பிராந்தியத்தில் இரத்ததானப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கல்முனை 08, தைக்கா வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் 16ஆவது இரத்ததான முகாம் (12) மஸ்ஜிதின் மேல் மாடியில் சிறப்பாக நடைபெற்றது. மஸ்ஜித் தலைவர் எம்.ஜே. அப்துஸ் ஸமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்

கல்முனை முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் 16ஆவது இரத்ததான முகாம் Read More »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள 3,794 குடும்பங்களுக்கு இதுவரை பௌசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார். மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் விவரங்கள் பின்வருமாறு: பதியத்தலாவ: 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,910 குடும்பங்களின் 9,177 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மகா ஓயா: 865 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 நபர்கள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார் Read More »

அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி கும்பாபிசேக குடமுழுக்கு

கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி கும்பாபிசேக குடமுழுக்கு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது.கும்பாபிசேகத்தை  முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி; காரியசித்தி கணபதி ஆராதனை கிரியைகள் ஆம்பமானதுடன்; மாலை பத்திரகாளி அம்மனின் பிரதான கலசம் தாங்கிய யானை ஊர்வலம் இடம்பெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் கலை கலாசார பாரம்பரிய நாட்டிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.நேற்று 12ஆம் திகதி அம்மனுக்கான

அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி கும்பாபிசேக குடமுழுக்கு Read More »

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்!

காரைதீவு பொலிஸார் தீவிர விசாரணை அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்! Read More »