• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • முள்ளிப்பொத்தானை சமூக உற்பத்திக் கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் 

முள்ளிப்பொத்தானை சமூக உற்பத்திக் கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் 

ஹஸ்பர் ஏ எச் 

திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை சதாம் நகரில் உள்ள சமூக உற்பத்திக் கிராமத்தில் இலவச ஆயுர் வேத மருத்துவ முகாம் இன்று (13)இடம் பெற்றன. கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் சமூக உற்பத்தி கிராம திட்டம் ஊடான முன்னெடுப்பில் இடம் பெற்றன.

 தேசிய உற்பத்தித்திறன் செயலகம் மற்றும் தம்பலாகாமம் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், குறித்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் தம்பலாகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன்,உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,ஆயுர்வேத வைத்தியர்கள்,பிரஜா சக்தி தலைவர் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு இலவச ஆயுர்வேத மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வானது, கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் மக்களுக்கான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் தெளிவூட்டப்பட்டன.

குறித்த பகுதியில் சமூக உற்பத்தி கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

அனோஜன் விவகாரம்  ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் மகஜர் கையளிப்புசவூதி மரண தண்டனை அச்சுறுத்தலைத் தடுக்க இராஜதந்திரத் தலையீட்டை வலியுறுத்திச் சந்திப்பு