• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம்: அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களில் மிளிர்ந்த கொழும்பு தாமரைக் கோபுரம்!

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம்: அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களில் மிளிர்ந்த கொழும்பு தாமரைக் கோபுரம்!

அமெரிக்காவின் 250வது சுதந்திர தின (சுதந்திரத்தின் கால் மில்லேனியம்) நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பின் அடையாளமான தாமரைக் கோபுரம் (Lotus Tower) அமெரிக்கத் தேசியக் கொடியின் வண்ணங்களால் ஒளிரூட்டப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த விசேட ஒளிரூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 250வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, தாமரைக் கோபுரம் முழுவதும் அமெரிக்கக் கொடியின் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இரு நாட்டு இருதரப்பு உறவுகளின் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்த ஒளிரூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அழகிய காட்சி கொழும்பு நகருக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது.

Share the Post: