• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வெசாக் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தன்சல் நிகழ்வு,

வெசாக் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தன்சல் நிகழ்வு,

வெசாக் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தன்சல் நிகழ்வு,  மாநகர சபை வளாகத்தின் முன்பாக மாநகர சபையின்  முதல்வர் க.செல்வராசா (சுப்ரா)அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ,உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

 வெசாக் பண்டிகை எடுத்துரைக்கும் கருணை, அன்பு, தியாகம் மற்றும் மனிதநேயப் பண்புகளைப் போற்றும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தன்சல் நிகழ்வின் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன.

இன, மத வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகப் பண்பை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்ததுடன், பொதுமக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வை மேலும் மேம்படுத்தும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

Share the Post: