மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடும் நோக்கில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் குழு ஒன்று வியாழக்கிழமை (05.11.2026) களவிஜயம் மேற்கொண்டிருந்தது.
மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன்; தலைமையில் இடம்பெற்ற இக் களவிஜயத்தின் போது, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை வடக்குப் பகுதியில் பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை ஊடகவியலாளர் குழு நேரில் பார்வையிட்டனர்.
இதன்போது, இப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, அரசாங்கத்தினால் 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நெல் உலர்த்தும் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பார்வையிடப்பட்டனர்.
நெல்உலர்த்தும் இயந்திர வசதி இன்மையால், மழைக்காலங்களில் நெல்லை உலர்த்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட அப்பகுதி விவசாயிகள், தமது விளைச்சலைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை நீண்டகாலமாகக் காணப்பட்டது. இந்நிலையைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டம், விவசாயிகளின் அறுவடைக்குப் பின்னரான இழப்புகளைக் குறைத்து, அவர்களின் வருமானத்தை மேம்படுத்தும். என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் மண்முனை மேற்கு பிதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்ட அவர்கள்
அதுபோல் அப்பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கற்பானைக் கிராமத்தில் காட்டுயானை உட்புகும் பகுதிகளை ஊடறுத்து 20000 பனை விதைகள் நடுகை செய்யப்படும் செய்ற்றிட்டத்தையும் ஊடகவியலாளர்கள் பார்வையிட்டனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட புழுக்குனாவைக் குளத்தை அண்மித்தாக மேற்கொள்ளப்பட்டுவரும் நன்நீர் மீன்வளர்ப்புத் திட்டம், மற்றும் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பழுகாமம் கிராமத்தில் அமைப்பட்ட மேம்பாலம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை மாவட்ட ஊடகப்பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்ளை அழைத்துச் சென்று நேரில் காண்பித்து இது முதல் சந்தர்ப்பமாகும்.







