இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 0 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 வரையிலான சிறார்கள் மற்றும் வளரிளம்பருவத்தினர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கம்.
இது தொடர்பாகப் பேசியுள்ள மருத்துவ நிபுணர்கள், சிறுவர்களிடையே கண்டறியப்படும் புற்றுநோய்களில் பெரும்பாலானவை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், நோய் அறிகுறிகள் குறித்து பெற்றோரிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பல சந்தர்ப்பங்களில் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்படுவதாக கவலை வெளியிடுகின்றனர்.
தொடர்ச்சியான காய்ச்சல், திடீர் உடல் எடைக் குறைவு, எலும்பு மற்றும் மூட்டு வலி, தோலில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் உடலின் பாகங்களில் ஏற்படும் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.




