Filter posts by category

அரசியல்

540846312 122132556776925861 8908532566634673964 n

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ள செயற்பாடுகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, முதலாவதாக மயிலிட்டி துறைமுகத்திற்குச் செல்லவுள்ளார். அதன்பின்னர், புதிய கடவுச் சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். வடக்கு மாகாணத்திற்கான இரண்டாவது, புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி இன்று […]

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் Read More »

536068761 122131038788925861 8571863499813038163 n

சட்டத்தின் முன் சகலருக்கும் சமமான யுகமொன்றை உருவாக்குவேன் – ஜனாதிபதி

அனைவருக்கும் சட்டத்தின் முன் சமமான யுகமொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பிக்குகள் தின நிகழ்வில் இன்றைய தினம் (26) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். பொது நிதியை முறைகேடாக பயன்படுத்திய எந்தவொரு நபருக்கும் தகுதி பாராது தண்டனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த பணத்தை மீள அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அழ முடியும், முணுமுணுக்க முடியும், கூச்சலிட முடியும். எனினும் முன்னால் வைக்கப்பட்ட

சட்டத்தின் முன் சகலருக்கும் சமமான யுகமொன்றை உருவாக்குவேன் – ஜனாதிபதி Read More »

539282140 122130829958925861 4086456087735580074 n

ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் சிறிது நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் Read More »

539269750 122130817766925861 3551021016351616769 n

கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள்

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் Read More »

532190186 122126719856925861 6481706093986731333 n

பகல் கனவு காணாது உங்களது கட்சிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் – அமைச்சரவை பேச்சாளர் சஜித், நாமலுக்கு அறிவுரை

அரசாங்கத்துக்குள் எந்த முரண்பாடுகளோ பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல் கனவாகும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்து செயற்பட்டு வருகிறது. எனவே சஜித் பிரேமதாசவும் நாமல் ராஜபக்ஷவும் அவர்களது கட்சிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானம் செலுத்துவதே பொறுத்தமானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும்

பகல் கனவு காணாது உங்களது கட்சிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் – அமைச்சரவை பேச்சாளர் சஜித், நாமலுக்கு அறிவுரை Read More »

532559542 122126694878925861 7806627370768211031 n

தமிழ் அரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்த கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள கடையடைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழ் அரசுக் கட்சியின்

தமிழ் அரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்த கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம் Read More »