admin

கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப்போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய விளையாட்டுப்போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரிடம் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.  பணிப்பாளருக்கு (14) அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணப் பாரம்பரிய விளையாட்டுப்போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மறைந்து போகும் நமது பாரம்பரியங்களைப் பாதுகாக்க இது போன்ற முயற்சிகள் உதவும்

கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப்போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை Read More »

அனோஜன் விவகாரம்  ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் மகஜர் கையளிப்புசவூதி மரண தண்டனை அச்சுறுத்தலைத் தடுக்க இராஜதந்திரத் தலையீட்டை வலியுறுத்திச் சந்திப்பு

பாறுக் ஷிஹான் சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரத்தில் துரித இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) அவர்களிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் விசேட மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார். யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவரை, யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.

அனோஜன் விவகாரம்  ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் மகஜர் கையளிப்புசவூதி மரண தண்டனை அச்சுறுத்தலைத் தடுக்க இராஜதந்திரத் தலையீட்டை வலியுறுத்திச் சந்திப்பு Read More »

மட்டக்களப்பு  கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் இரவில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு வாவியில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இரவு 8.00 மணிக்கு இடம் பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான இரவு 8.00 மணியளவில்  யுவதி ஒருவர் அவரது பாட்டா மற்றும் கை பை குடை என்பவற்றை கைவிட்டு விட்டு

மட்டக்களப்பு  கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் இரவில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். Read More »

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து   ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்- லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ்  தொடர்ந்து பிடிவிறாந்து

(கனகராஜா சரவணன்)  மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும்  ஒக்டோபர் 27 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி  செவ்வாய்க்கிழமை (13) காணொளி ஊடாக உத்தரவிட்டார். 2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ்

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து   ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்- லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ்  தொடர்ந்து பிடிவிறாந்து Read More »

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

பாறுக் ஷிஹான் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “Life City” 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின் கீழ், கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தினூடான “கல்முனை – காரைதீவு நகராக்கம்” எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தொடர்பான முக்கிய ஆரம்பக் கட்ட மீளாய்வுக் கலந்தரையாடல் திங்கட்கிழமை (12) கல்முனை மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) ஏற்பாட்டில் வெகுசிறப்பாக நடைபெற்றது. கிராமிய அபிவிருத்தி,

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம் Read More »

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபர் ஏ.ஜி.எம். ரிஸாத் கௌரவிப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள ஏ.ஜி.எம். ரிஸாத்   அவர்களுக்குக் கல்முனை மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் சார்பில் சிறப்பான கௌரவிப்பும் வரவேற்பும் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் நிர்வாக சபைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு புதிய அதிபரை அன்போடு வரவேற்றனர்.  பாடசாலையின்

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபர் ஏ.ஜி.எம். ரிஸாத் கௌரவிப்பு Read More »

அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைதுரூபா 7 இலட்சம் பெறுமதியான உருக்கப்பட்ட தங்க நகைகளுடன் கல்முனைக் கடை ஊழியர்களும் சிக்கினர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட, அத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறையிலுள்ள கொண்டுவட்டுவான்  குளத்திற்கு அருகே பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன  பகுதியில்

அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைதுரூபா 7 இலட்சம் பெறுமதியான உருக்கப்பட்ட தங்க நகைகளுடன் கல்முனைக் கடை ஊழியர்களும் சிக்கினர் Read More »

முள்ளிப்பொத்தானை சமூக உற்பத்திக் கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் 

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை சதாம் நகரில் உள்ள சமூக உற்பத்திக் கிராமத்தில் இலவச ஆயுர் வேத மருத்துவ முகாம் இன்று (13)இடம் பெற்றன. கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் சமூக உற்பத்தி கிராம திட்டம் ஊடான முன்னெடுப்பில் இடம் பெற்றன.  தேசிய உற்பத்தித்திறன் செயலகம் மற்றும் தம்பலாகாமம் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், குறித்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தம்பலாகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன்,உதவி

முள்ளிப்பொத்தானை சமூக உற்பத்திக் கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்  Read More »

திருகோணமலையில் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலுக்கான தேசிய செயல் திட்டம் தொடர்பில் மீனவ சமூகத்தினருடன் கலந்துரையாடல்.

ஹஸ்பர் ஏ எச் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலுக்கான தேசிய செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, மீனவ சமூகத்தினரைத் தெளிவுபடுத்தி அவர்களது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (12) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலை மாவட்ட மீனவ சமூகத்தினரின் அனுபவங்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகளைத் தேசிய செயல் திட்டத்தில் உள்ளடக்குவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன்போது கருத்துத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள், மீன்பிடித்

திருகோணமலையில் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலுக்கான தேசிய செயல் திட்டம் தொடர்பில் மீனவ சமூகத்தினருடன் கலந்துரையாடல். Read More »

திருகோணமலையில் பள்ளிவாயல் மேம்பாடு மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பள்ளிவாயல் மேம்பாடு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு 2026 ஒக்டோபர் 11ஆம் திகதி சோனகவாடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர், மாவட்ட மேலதிகப் பதிவாளர், காழி நீதிபதி, முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள், ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள்

திருகோணமலையில் பள்ளிவாயல் மேம்பாடு மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு Read More »