admin

களுவாஞ்சிக்குடியில்; கம்பனி ஒன்றில் ஈடு வைத்த ஒரு கோடியே 57 இலட்சம் தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலச்சம் பணத்துடன் முகாமையாளர் மாயம்–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை ஈடுபிடிக்கும் கம்பனி ஒன்றின் முகாமையாளர்  ஒரு கோடியே 57 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலச்சம் ரூபா பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை ஈடு பிடிக்கும் நிறுவனம் ஒன்றில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (24) ம் திகதி அதன்

களுவாஞ்சிக்குடியில்; கம்பனி ஒன்றில் ஈடு வைத்த ஒரு கோடியே 57 இலட்சம் தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலச்சம் பணத்துடன் முகாமையாளர் மாயம்– Read More »

மட்டு நகரில் நிறுத்தி வைக்கும் மோட்டார் சைக்கிள்களின் சீற்றை உடைத்து கையடக்க தொலைபேசி, தங்க ஆபரணங்களை திருடி வந்த திருடனுக்கு விளக்கமறியல்

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் மோட்டர் சைக்கிள்களை குறிவைத்து அந்த மோட்டார் சைக்கிள்களின் போலியாக தயாரிக்கப்பட்ட சாவிகளை கொண்டு திறந்து அதில் இருக்கும் கையடக்க தொலைபேசி மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த சம்பவம் தொடர்பாக  கைது செய்யப்பட்ட வவுணதீவைச் சேர்ந்த திருடனை எதிர்வரும் எதிர்வரும் 08 ம் திகதி வரை 14  நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை

மட்டு நகரில் நிறுத்தி வைக்கும் மோட்டார் சைக்கிள்களின் சீற்றை உடைத்து கையடக்க தொலைபேசி, தங்க ஆபரணங்களை திருடி வந்த திருடனுக்கு விளக்கமறியல் Read More »

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம்: மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வு*

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வா அவர்களின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வொன்று இன்று (26) உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில், வந்தாறுமூலையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் காரியாலயத்தில் இந்த அறப்பணி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான *இரா.சாணக்கியன், *ஞா.சிறிநேசன் மற்றும் வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம்: மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வு* Read More »

வெளிவாரி கல்விப் பயணத்தைத் தொடங்கிய கலை இளமாணி மாணவர்கள் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வழிகாட்டல் நிகழ்வு.

பாறுக் ஷிஹான்இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையம் (CDPL) ஏற்பாடு செய்திருந்த 2022/2023 கல்வியாண்டிற்கான கலை இளமாணி (BA External) பட்டப்படிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் வழிகாட்டல் கருத்தரங்கும் 2026 ஏப்ரல் 25ஆம் திகதி ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் பிரதான உரையாற்றினார். அவர் தனது உரையில், வெளிவாரி பட்டப்படிப்பு என்பது எளிதான பாதை அல்ல; அது

வெளிவாரி கல்விப் பயணத்தைத் தொடங்கிய கலை இளமாணி மாணவர்கள் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வழிகாட்டல் நிகழ்வு. Read More »

நடுவர்களுக்கு மட்டக்களப்பு மேற்கில் பயிற்சிப் பட்டறை.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் நடுவர்களாகப் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை(24.04.2026) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நடுவர்கள் போட்டிகளைச் சிறந்த முறையிலும், பக்கச்சார்பற்ற ரீதியிலும் மதிப்பீடு செய்வதற்கான நுட்பங்களைப் பெற்றுக்கொடுப்பதே இப்பயிற்சியின் பிரதான நோக்கமாகும்.பாடஇணைப்பாளர் பு.சதீஸ்குமாரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதி கல்விப் பணிப்பாளர்களான பு.திவிதரன், திருமதி.க.சுவாகரன், திருமதி.தே.உதயகரன், கணக்காளர் வி.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஓய்வுபெற்ற தமிழ்பாட

நடுவர்களுக்கு மட்டக்களப்பு மேற்கில் பயிற்சிப் பட்டறை. Read More »

மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாத சிகை அலங்கார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட இரு சிகை அலங்கார நிலையங்களில் பாடசாலை மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாத சிகை அலங்கார நிலையங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை(24.04.2026) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே.வினோராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கடுமையாக எச்சரித்து இரு சிகை அலங்கார நிலையங்களையும் இழுத்து மூடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை அதிபர்கள், மற்றும் பெற்றோர்கள் பிரதேச சபை தவிசாளரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய,

மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாத சிகை அலங்கார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. Read More »

கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையினதும் அடிப்படை உரிமை என்பதையும், வறுமை அல்லது சமூக நிலைமை எதுவும் ஒரு குழந்தையின் கற்கை ஆர்வத்தைத் தடுத்துவிட முடியாது என்பதையும் உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

திலின களுத்தோட்டகே (Thilina Kaluthotage) என்பவரால் படம் பிடிக்கப்பட்ட இந்தப் புகைப்படம், வெறும் ஒரு காட்சி அல்ல, அது சமூகத்தின் ஆழ்ந்த உண்மைகளையும், விடாமுயற்சியின் அழகையும் பேசும் ஒரு கவிதை. இரவின் கும்மிருட்டில், வீதியின் மஞ்சள் விளக்கொளி ஒரு சிறிய வட்டத்தை உருவாக்குகிறது. இந்த வெளிச்சம் இருளை வென்று, அந்தச் சிறுமியின் புத்தகத்தின் மீது படுகிறது. இது அறியாமையை வெல்லும் கல்வியின், நம்பிக்கையின் ஒளியைக் குறியீடாக உணர்த்துகிறது. தூய்மைப் பணியாளர்களான பெற்றோர், அவர்கள் அன்றாடம் வேலை செய்யும்

கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையினதும் அடிப்படை உரிமை என்பதையும், வறுமை அல்லது சமூக நிலைமை எதுவும் ஒரு குழந்தையின் கற்கை ஆர்வத்தைத் தடுத்துவிட முடியாது என்பதையும் உலகிற்கு உரக்கச் சொல்கிறது. Read More »

குடும்பஸ்தரின்   சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

பாறுக் ஷிஹான் வீட்டு   அறையில் தூக்கிட்டு  மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை(24)  அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை  பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டின்    அறையில் தூக்கில் தொங்கிய நிலையில்   34 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின்  மரணம் தொடர்பில்  சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன்    முன்னிலையில் மரண

குடும்பஸ்தரின்   சடலம் உறவினர்களிடம் கையளிப்பு Read More »

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக  பதவியேற்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக  இன்று    தனது கடமைகளை ஆரம்பித்தார். சுப நேரத்தில்   இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்ற அவர் சப்ரகமுவ மாகாணம்  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட  நூரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய நிலையில்    தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டள்ளார். மேலும் அம்பாறை மாவட்டத்தின்  சாய்ந்தமருது பொலிஸ்

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக  பதவியேற்பு Read More »