அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில் , பாலமுனை, பிரதேசங்களில் திடீர் சோதனை
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள இரவு நேர உணவகங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திடீர் சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை (27) இரவு முதல் இவ் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரமான










