admin

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை துரிதப்படுத்த ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும்.!

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வலியுறுத்துகிறது பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை ஜனாதிபதி ஊடாக துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் நிறைவேற்றியுள்ளது. சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்  அண்மையில் நடைபெற்ற போது அதன் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.எம்.

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை துரிதப்படுத்த ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும்.! Read More »

கிளிநொச்சியில் பகல் வேளையில் ‘விளையாட்டு காட்டிய’ இளம் தம்பதி பொலிஸாரிடம் சிக்கினர்: 9 வீடுகளில் கைவரிசை!

புருசனும் பெண்டாட்டியுமாகச் சேர்ந்து இந்தளவுக்கு அட்டகாசம் செய்திருக்கிறீங்க!” என்று ஊரே பேசும் அளவுக்கு, கிளிநொச்சியில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதியினரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில வாரங்களாகவே பெரும் அச்சத்தில் இருந்தனர். மக்கள் வேலைகளுக்குச் சென்ற வேளையில், பூட்டப்பட்டிருந்த வீடுகளைக் குறிவைத்து நகைகளும் பெறுமதியான பொருட்களும் மர்மமான முறையில் திருடப்பட்டு வந்தன. ஏதோ ஒரு

கிளிநொச்சியில் பகல் வேளையில் ‘விளையாட்டு காட்டிய’ இளம் தம்பதி பொலிஸாரிடம் சிக்கினர்: 9 வீடுகளில் கைவரிசை! Read More »

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச்  சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட  ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம் உற்பத்தி நடைபெறுவதாக அம்பாறை மாவட்ட  ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர்  பிரியங்கரவுக்குக்   ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. குறித்த தகவலின் அடிப்படையில்    இந்தச் சோதனை நடத்தப்பட்டதுடன்  3,60,000 மில்லி

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு Read More »

மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபா அபதாரம் 14 நாட்களுக்கு சீல் வைப்பு —

(கனகராஜா சரவணன்)) மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலை உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  உணவக உரிமையாளரை     50 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்துமாறும் 14 நாட்களுக்கு உணவகத்தை மூடி சீல் வைக்குமாறு வெள்ளிக்கிழமை (15) கட்டளை பிறப்பித்ததையடுத்து குறித்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது– .குறித்த உணவகத்தை மட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி மனித

மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபா அபதாரம் 14 நாட்களுக்கு சீல் வைப்பு — Read More »

மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 81வது வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாள் உற்சவமான இன்றைய தினம் தேரோட்ட உற்சவதிருவிழா நடைபெற்றது.

சுந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் மகோற்சவமானது சென்ற 30ம் திகதி வியாழக்கிமை மகோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ வைத்தியநாத வைகுந்த சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.மகோற்சவத்தின் 16ம் நாளாகிய இன்றைய தினம் ஆலயத்தின் 20வது ஆண்டு தேர்ரோட்டமாக அமையபெற்றதுடன் காலையில் மூலமுர்த்தி விநாயகப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று அதன் பின்னர் வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றது.பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு வேத பாராயணம் முழங்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேர் ஏறுவதற்காக உள் வீதி உலா வலம்வந்ததும் விநாயகப்பெருமான் தேரில்

மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 81வது வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாள் உற்சவமான இன்றைய தினம் தேரோட்ட உற்சவதிருவிழா நடைபெற்றது. Read More »

குருக்கள்மடம் மனிதப்புதைகுளி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தை Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி.

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை வியாழக்கிழமை(14.05.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் திறந்த மன்றிலே அழைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அதன்போது சமூகமளித்திருந்தனர் . அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதிக்கு பல விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த நிலையில் சடுதியாக மழை

குருக்கள்மடம் மனிதப்புதைகுளி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தை Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி. Read More »

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (15.05.2026) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது. இதற்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், பிரதேச செயலாளர் உருத்திரன் உதயசிறிதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினேராஜ் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கல்வி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு, சுகாதாரம், விவசாயம், கால்நடை,

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம் Read More »

போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ! ! !

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுமியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்றயதினம் வெள்ளிக்கிழமை(15.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்பகுதி பொதுமக்களால்

போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ! ! ! Read More »

மட்டக்களப்பு – செங்கலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு – செங்கலடியி பகுதியில் மே18 முள்ளவாய்க்கால் நாளைநினைவுகூர்ந்து இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிர்ந்தளிந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மு.முரளிதரன் மற்றும் ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடி பிரதேசசபையின் உறுபப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் , இந்து மதகுரு , பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி

மட்டக்களப்பு – செங்கலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு! Read More »

அம்பாறையில்  மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்

பாறுக் ஷிஹான் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக   எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை  நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது. சில பகுதிகளில் நேற்று இரவு   மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  இரவு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய

அம்பாறையில்  மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம் Read More »