அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு.
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து 66 மாணவர்கள் தோற்றி இதில் 59 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்த நிகழ்வு நேற்று தினம் (22) ஆராதனையில் அதிபர் திருமதி து.குணரத்ன தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்விற்கான பங்களிப்பை பாடசாலையின் உதவி அதிபர்கள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்










