• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அவசர அறிவித்தல்: ஹோமாகம, கொட்டாவ, மகரகம உட்பட பல பகுதிகளில் நாளை முதல் 24 மணித்தியால நீர்வெட்டு!

அவசர அறிவித்தல்: ஹோமாகம, கொட்டாவ, மகரகம உட்பட பல பகுதிகளில் நாளை முதல் 24 மணித்தியால நீர்வெட்டு!

லபுகம மற்றும் கலடுவாவ ஆகிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மகரகம வரை நீரைக்கொண்டு செல்லும் பிரதான விநியோகக் குழாயில் அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக நாளை (ஜூன் 24) மாலை முதல் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகத் தடை அமுலாகும் காலம்:

  • ஆரம்பம்: 2026 ஜூன் 24, புதன்கிழமை மாலை 6:00 மணி
  • நிறைவு: 2026 ஜூன் 25, வியாழக்கிழமை மாலை 6:00 மணி

பாதிக்கப்படும் பகுதிகள்:

  • கலகெதர
  • ஹோமாகம
  • கொட்டாவ
  • பன்னிபிட்டிய
  • பெலன்வத்த
  • மஹரகம

இந்தத் திடீர் நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிததுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share the Post: