மட்டக்களப்பு – செங்கலடியி பகுதியில் மே18 முள்ளவாய்க்கால் நாளைநினைவுகூர்ந்து இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிர்ந்தளிந்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மு.முரளிதரன் மற்றும் ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடி பிரதேசசபையின் உறுபப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் , இந்து மதகுரு , பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டதுடன், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தாப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.






Views: 190




