முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்ட நிகழ்வு தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு நடைபவனி தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் ஒன்றிணைந்து முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு திட்டத்தை முன்னிட்டு இளைஞர் பேரணி மற்றும் நடைபவனி நடைபெற்றது.
மங்களராமய விகாரையில் இருந்து காந்தி பூங்கா வரை விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் போதை பாவனையை சமூகத்தில் இருந்து அகற்றுவோம் எனும் கருப்பொருள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன்
பொலிஸ் அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டு காந்தி பூங்காவில் விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம் பெற்றது.



Views: 144




