கடும் காற்றால் பலத்த சேதம்

கடும் காற்றழுத்தம் காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள இரு கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

கடும் காற்றின் வேகம் அதிகரித்தமையால் நேற்று (22) உரிய கட்டிடங்களின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. 

கால நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தற்போது கடும் காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக கூரைகள் தகரம் தூக்கி எரியப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய பிரிவினருக்கு சேத விபரம் தொடர்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Share the Post:

Related Posts