வந்தாறுமூலையில் கோலாகலமாக இடம்பெற்ற பாரம்பரிய கொம்புமுறி நிகழ்வு

vadivel shagthivel

வந்தாறுமூலையில் கோலாகலமாக இடம்பெற்ற பாரம்பரிய கொம்புமுறி நிகழ்வு

மழைவளம் பெருகி, விவசாயம் செழிக்கவும், கொடிய நோய்களும் வரட்சியும் நீங்கி மக்கள் வளம் பெறவும் வேண்டி நடாத்தப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய ‘கொம்புமுறி’ நிகழ்வு மட்டக்களப்பு வந்தாறுமூலை கிராமத்தில் கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் பக்திபூர்வமாக சனிக்கிழமை (07.11.2026)இடம்பெற்றுள்ளது.

தமிழர்களின் தொன்மையான பண்பாடு, கலாசாரம், ஒற்றுமை மற்றும் கிராமியக் கலை மரபுகளைப் பறைசாற்றும் முக்கிய நிகழ்வாக கொம்புமுறி நிகழ்வு விழங்கி வருகின்றது.

கண்ணகை அம்மன் வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய இப்பாரம்பரிய வழிபாட்டு முறையில், கிராம மக்கள் வடசேரி மற்றும் தென்சேரி என இரு பிரிவுகளாகச் சினேகபூர்வமாகப் பிரிந்து நின்று இந்நிகழ்வில் பங்கேற்பது இதன் சிறப்பம்சமாகும்.

இக்கொம்புமுறி நிகழ்வு வெறும் வேண்டுதல்களுக்காகவும், பாரம்பரியம் பேணுதல்களுக்காகவும், மாத்திரமன்றி மக்களின் ஒற்றுமையையும் தன்னம்பிக்கையையும், வெளிப்படுத்தும் ஒரு முக்கிய களமாகவும், பார்வையாளர்களுக்குப் பெருமகிழ்ச்சியளிக்கும் கலாசாரத் திருவிழாவாகவும் தொடர்ச்சியாகத் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: