ஹட்டன் – யாழ்ப்பாணம் இடையே புதிய இ.போ.ச. பஸ் சேவை கோலாகலமாக ஆரம்பம்!

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் புதிய இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பஸ் சேவை (05.11.2026) வியாழக்கிழமை ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன இந்நகர்வை ஆரம்பித்து வைத்தார். ஹட்டன் மற்றும் காரைநகர் இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து இச்சேவையை முன்னெடுக்கின்றன.

பஸ் சேவை நேரங்கள் மற்றும் விபரங்கள்:

  • ஹட்டனிலிருந்து: தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்.
  • யாழ்ப்பாணத்திலிருந்து: தினமும் பிற்பகல் 4.45 மணிக்கு ஹட்டன் நோக்கிப் புறப்படும்.

இச்சேவைக்கான ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் (Booking) வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் இ.போ.ச. டிப்போ முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவித்தார்.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நேரடி பஸ் சேவைக்கு மலையக மக்கள் பெரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், முதலாவது பயணத்திலேயே அதிகளவான பயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர்.

முன்னதாக, புதிய பஸ் சேவையை முன்னிட்டு டிக்கோயா வனராஜா தோட்டத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தில் டிப்போ முகாமையாளர், ஊழியர்கள், சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

Share the Post: