• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு மாதாந்த கல்வி நிதியுதவி: ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை!

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு மாதாந்த கல்வி நிதியுதவி: ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை!

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், அவர்களுக்கு மாதாந்த கல்வி நிதியுதவி வழங்குவது குறித்து ஜனாதிபதி நிதியம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே மற்றும் தேசிய லொத்தர் சபை (NLB), அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் தற்போது பல்வேறு சமூகப் பிரிவினரை உள்ளடக்கிய வகையில் குறைந்த வருமானம் பெறுவோருக்குப் பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காகப் பல நிதியுதவித் திட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றின் மற்றுமொரு கட்டமாக, வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, இந்த புதிய கல்வி நிதியுதவித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை தனது பூரண அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts