October 25, 2026

மட்டக்களப்பு வாவியில் முதன் முதலாக மிதக்கும் உணவக படகுச் சேவை லியா கபே ஹோட்டல் ஆரம்பித்து வைப்பு

  (கனகராஜா சரவணன்) இலங்கையின் இரண்டாவது நீளமான மட்டக்களப்பு வாவியில் மிதக்கும் உணவகம் ஒன்றை கல்லடியில் அமைந்துள்ள லியா கபே ஹோட்டல்  உல்லாச துறையை ஊக்குவிக்கும் முகமாக முதன் முதலாக அறிமுகப்படுத்தி நேற்று சனிக்கிழமை (24) சம்பிரதாய பூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் இணைந்து நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தனர். கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்துள்ள லியா கபே ஹோட்டல் உரிமையாளர் சரண்ராஜ் உல்லாச பயணிகளை கவரும் திட்டத்தில் மட்டக்களப்பு

மட்டக்களப்பு வாவியில் முதன் முதலாக மிதக்கும் உணவக படகுச் சேவை லியா கபே ஹோட்டல் ஆரம்பித்து வைப்பு Read More »

உகன நவகிரியா பகுதியில் காட்டு யானை அட்டகாசம்- வீடு பலத்த சேதம்

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்]அம்பாறை மாவட்டம், உகன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியா பகுதியில் புகுந்த காட்டு யானையொன்று அங்கிருந்த வீடொன்றை அடித்து நொறுக்கிப் பலத்த சேதப்படுத்தியுள்ளது. இன்று(25)  அதிகாலை வேளையில் கிராமத்திற்குள் ஊடுருவிய இக்காட்டு யானை, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீட்டின் சுவர்கள் மற்றும் கதவுகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ள போதிலும், வீட்டிலிருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் பல

உகன நவகிரியா பகுதியில் காட்டு யானை அட்டகாசம்- வீடு பலத்த சேதம் Read More »

கல்முனை பிரதான வீதியில் யானைகள் புகுந்து அட்டகாசம்- சத்தோச களஞ்சியம் மற்றும் வீட்டின் மதில்கள் சேதம்.

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்] அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ‘அக்ரம் பார்ம் ஹவுஸ்’ (Akram Farm House) முன்பாக உள்ள லங்கா சத்தோச நிறுவனத்தின் களஞ்சியசாலை மற்றும் அதனை அண்டியுள்ள வீடொன்றின் பிரதான வாயில் , சுற்றுமதில்கள் என்பவற்றை இன்று(25) அதிகாலை இரண்டு காட்டு யானைகள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகளும், சத்தோச களஞ்சியசாலையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், அருகிலிருந்த வீடொன்றின்

கல்முனை பிரதான வீதியில் யானைகள் புகுந்து அட்டகாசம்- சத்தோச களஞ்சியம் மற்றும் வீட்டின் மதில்கள் சேதம். Read More »

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியனில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் முயற்சியில் நடவடிக்கை [அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்] அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியான வொலிவேரியன் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 30 மில்லியன் ரூபாய் செலவிலான கிராம உள்ளக வீதிகள் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தீவிர முயற்சியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இக்கிராமத்து வீதிகளைப் புனரமைத்து அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியனில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்! Read More »

சம்மாந்துறை  நெல் வயலில் விழுந்து உயிரிழந்த காட்டு யானை-பிரேதப் பரிசோதனை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்]அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் நெல் வயலில் விழுந்து அவதிப்பட்டு வந்த காட்டு யானை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு வனவிலங்கு மண்டலத்தின் அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் இயங்கும் வளத்தாப்பிட்டி   களப் பாதுகாப்பு அரணின் சம்மாந்துறை பிரிவு எண் 4-இல் உள்ள   பகுதியில்இ கடந்த 21 ஆம் திகதி காலை காட்டு யானையொன்று நெல் வயலில் வீழ்ந்துள்ளது. தொடர்ந்து, குறித்த யானைக்கு வனவிலங்கு

சம்மாந்துறை  நெல் வயலில் விழுந்து உயிரிழந்த காட்டு யானை-பிரேதப் பரிசோதனை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு Read More »

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரங்குடா பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மோட்டார் குண்டொன்றும், ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குளக்கரை சீரமைப்புப் பணியின்போது மோட்டார் குண்டு மீட்புகடந்த வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் சுமார் 1.45 மணியளவில், கஞ்சிகுடிச்சாறு பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த இடத்தை அரச அபிவிருத்திப் பணியாளர்கள் அல்லது பொதுமக்கள் சீரமைக்கும் பணியில்

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு Read More »