சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி திருகோணமலை இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி (20) திருகோணமலை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுன் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில்





