காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் (Galle Southlands College) மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் (14) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ ஆகியோரின் தலைமையில் இந்த ஆரம்ப அமர்வு இடம்பெற்றது.
காலி சௌவுத்லண்ட் கல்லூரி மாணவிகளுக்கு பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, சட்டதிட்டங்கள் மற்றும் அதன் நாளாந்த செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறை ரீதியிலான நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதே இந்நாடாளுமன்ற அமர்வின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கான ஏற்பாடுகளை காலி சௌவுத்லண்ட் கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து கூட்டு முயற்சியாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விசேட அமர்வின் போது மாணவிகள் பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் வழிமுறைகளை மிகவும் ஆர்வத்துடன் கையாண்டனர்.









