கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், கிழக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையேயான கூட்டம் இன்று (23) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம், இந்திய உதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், மாகாண வருவாய் இலக்குகளை அடைதல், கிழக்கு மாகாண சபையில் அமைச்சசுக்கள் மற்றும் திணைக்களங்களின் தற்போதைய திட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்களின் தலையீடு போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.



Views: 123




