வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘பயனர் பெயர்’ (Username) அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், உங்களுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை (Phone Number) மற்றவர்களுக்குப் பகிராமலேயே நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ள முடியும். நீங்கள் விரும்பினால், உங்களைத் தொடர்புகொள்பவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் தெரியாதவாறு முழுமையாக மறைத்துக்கொள்ளும் பிரத்தியேக வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்குத் தகுதியுள்ள பயனர்கள், வாட்ஸ்அப் செயலியின் Settings > Account > Username பகுதிக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான தனித்துவமான பெயர்களை (Username) இப்போதே முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
தற்போது உலகளவில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் இந்த அம்சம், உங்கள் பகுதிக்குக் கிடைக்கும்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உங்கள் வாட்ஸ்அப் செயலியினூடாவே உங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




