• Home
  • உள்ளூர் செய்திகள்
  • வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 220 ஆண்டுகள் கடூழிய சிறை; 9 பேர் விடுதலை; சொத்துக்களும் அரசுடமை!

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 220 ஆண்டுகள் கடூழிய சிறை; 9 பேர் விடுதலை; சொத்துக்களும் அரசுடமை!

2019ஆம் ஆண்டு நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், 15 குற்றவாளிகளுக்கு தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • 220 ஆண்டுகள் கடூழிய சிறை: 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
  • சொத்துக்கள் அரசுடமை: குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசுடமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • 9 பேர் விடுதலை: சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த 24 பேரில் 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், அவர்கள் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
  • விசாரணையின் போது மரணம்: வழக்கில் 17ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த யாசின் பாவா அப்துல் ரவூப், வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் சிறைக்காவலில் உயிரிழந்திருந்தார்.

குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் (15 பேர்):

  1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  2. முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக் / கபூர் மாமா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  3. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  4. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  5. முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  6. முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  7. முகம்மது மன்சூர் முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  8. அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  9. முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக் / சாஜித் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  10. ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  11. முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  12. முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  13. ராசிக் ராஸா ஹுஸைன் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  14. கச்சி முகம்மது ஜஸ்மின் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  15. அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்) – ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு; ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டவர்கள் (9 பேர்):

  1. முகம்மது சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்)
  2. முகம்மது இப்திகார் முகம்மது இன்சாப் (அபு முகம்மது)
  3. ரஷீத் முகம்மது இப்ராஹிம்
  4. சைனுல் ஆப்தீன் முகம்மது ஜசீம்
  5. முகம்மது முஸ்தபா முகம்மது ரிஸ்வான்
  6. மீரா சாஹிப் முகம்மது நப்கி (அபு சனா)
  7. முகம்மது அமீர் முகம்மது அயாத்துல்லா
  8. முகம்மது அன்சார்தீன் முகம்மது இல்மி
  9. முகம்மது அக்ரம் அஹக்கம்

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்மைக்காலமாக கிழக்கு  மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் பார்க்க முடிகின்றது – களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத் தலைவர்.