• Home
  • உள்ளூர் செய்திகள்
  • லெப்பைக்குடி முதலாம் பாக உறவுகள் ஒன்றுகூடல்: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

லெப்பைக்குடி முதலாம் பாக உறவுகள் ஒன்றுகூடல்: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

குடும்ப மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், அட்டாளைச்சேனை லெப்பைக்குடி முதலாம் பாகத்தைச் சேர்ந்தவர்களுக்கான விசேட ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (25) இரவு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

லெப்பைக்குடி நான்கு பாகங்களின் ஒட்டுமொத்த ஒன்றுகூடலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு, முதலாம் பாகத்தின் தலைவர் (கிராம சேவகர்) எம்.எல். சாஜஹான் தலைமையில் நடைபெற்றது.

ஏ.சி. முஅன்னத் அஹமட் மௌலவியின் கிறாஅத் பாராயணத்துடன் நிகழ்வு இனிதே தொடங்கியது. ஓய்வுபெற்ற அதிபர் எம்.ஐ. அப்துல் றவூப் மரைக்கார் உரையாற்றியதைத் தொடர்ந்து, நௌபீஸ் மௌலவி “குடும்ப உறவுகளைப் பேணிப் பாதுகாக்கும் வழிகள்” குறித்து சிறப்புரையாற்றினார்.ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ.பி. கமால்தீன் பொதுவுரையாற்றினார்.மூதூர் பிரதேச செயலாளர் (சட்ட முதுமாணி) எம்.ஐ. பிர்னாஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். அஸ்வர் சாலி ஆகியோர் விசேட உரைகளை ஆற்றினர்.

லெப்பைக்குடி முதலாம் பாகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு சமூக உறவுகளையும், பரஸ்பர அன்பையும் புதுப்பித்துக் கொண்டனர்.

Share the Post: