• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ரம்புட்டான் பழத்தினது விதை தொண்டையில் சிக்கி கெப்பற்றிபொலவை சேர்ந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு

ரம்புட்டான் பழத்தினது விதை தொண்டையில் சிக்கி கெப்பற்றிபொலவை சேர்ந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு

​ரம்புட்டான் சீசன் ஆரம்பித்துள்ள இந்த வேளையில், ஒட்டுமொத்த பெற்றோர்களையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சிச் செய்தி ஒன்று கெப்பற்றிபொல (Keppetipola) பகுதியில் இருந்து வெளியாகியுள்ளது!

அங்கு ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 7 வயது சிறுவன் ஒருவன், அதன் விதை எதிர்பாராதவிதமாக தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

​இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்களுக்கு மிக முக்கியமான அவசர எச்சரிக்கை ஒன்றைக் விடுத்துள்ளனர்….

​ விதையோடு கொடுக்க வேண்டாம் – சிறு பிள்ளைகளுக்கு ரம்புட்டான், நெல்லி, மாம்பழம் போன்ற கொட்டைகள் கொண்ட பழங்களைக் கொடுக்கும் போது, தயவுசெய்து விதைகளை முழுமையாக நீக்கிய பின்பே கையில் கொடுங்கள்!

​அருகில் இருந்து கவனியுங்கள் – பிள்ளைகள் பழங்களை உண்ணும் போது ஓடிவிளையாடுவதையோ அல்லது சிரித்துப் பேசுவதையோ தவிருங்கள். எப்போதும் ஒரு கண் அவர்கள் மீது இருக்கட்டும்

​ விழிப்புணர்வே பாதுகாப்பு – உங்களின் ஒரு நொடி அசமந்தப்போக்கு ஒரு பிஞ்சிரின் உயிரையே பறித்துவிடக்கூடும் என்பதால் எப்போதும் அவதானமாக இருங்கள்

Share the Post: