June 25, 2026

‘அஸ்வெசும’ அடுத்த கட்டம்: வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இனி நிதியுதவி!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் அடுத்த கட்டத்தில், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அஸ்வெசும நலத்திட்டம், தற்போது இரண்டாம் கட்டத்திற்குள் நுழையவுள்ளது. இதற்கான பயனாளிகளின் விவரங்களை அதிகாரிகள் தற்போது தீவிரமாகப் புதுப்பித்து வருகின்றனர். இந்த திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 1.6 மில்லியன் பயனாளிகள் நிதியுதவிகளைப் பெற்றிருந்தனர். எனினும், தற்போதைய மறுசீரமைப்புகளின்படி பின்வரும் மாற்றங்கள்

‘அஸ்வெசும’ அடுத்த கட்டம்: வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இனி நிதியுதவி! Read More »

19 மில்லியன் ரூபா முதலீட்டு விவகாரம்: கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ரோஹித ராஜபக்ச முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ச, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு தனியார் நிறுவனங்களில், 19 மில்லியன் ரூபா சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் அங்கு சமூகமளித்துள்ளார். இதனடிப்படையில், இன்று காலை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குச் சென்ற அவர், விசாரணை அதிகாரிகளுக்கு முன்னிலையாகியுள்ளார்.

19 மில்லியன் ரூபா முதலீட்டு விவகாரம்: கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ரோஹித ராஜபக்ச முன்னிலை! Read More »

இந்திய – இலங்கை ‘ரூபாய் – ரூபாய்’ வர்த்தக முறைமை: இருதரப்பு வர்த்தகத்தை 40% வரை அதிகரிக்க இலக்கு!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘ரூபாய் – ரூபாய்’ (INR – LKR) வர்த்தக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றத்தை 30% முதல் 40% வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிட்ட அவர், இத்திட்டம் அமுல்படுத்தப்படும் முதலாம் ஆண்டிலேயே வர்த்தகப் பரிமாற்றம் 15% முதல்

இந்திய – இலங்கை ‘ரூபாய் – ரூபாய்’ வர்த்தக முறைமை: இருதரப்பு வர்த்தகத்தை 40% வரை அதிகரிக்க இலக்கு! Read More »

வெனிசூலாவை உலுக்கிய இரட்டை சக்திவாய்ந்த பூகம்பங்கள்!

வெனிசூலாவின் தலைநகர் கராகாஸ் அருகே நேற்று (24) ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. இந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன் பாரிய சேதமும் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும் என்றும், பேரழிவு மிகப் பரவலாக இருக்கலாம் என்றும் ஆரம்பகட்ட மதிப்பீட்டை

வெனிசூலாவை உலுக்கிய இரட்டை சக்திவாய்ந்த பூகம்பங்கள்! Read More »

ரம்புட்டான் பழத்தினது விதை தொண்டையில் சிக்கி கெப்பற்றிபொலவை சேர்ந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு

​ரம்புட்டான் சீசன் ஆரம்பித்துள்ள இந்த வேளையில், ஒட்டுமொத்த பெற்றோர்களையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சிச் செய்தி ஒன்று கெப்பற்றிபொல (Keppetipola) பகுதியில் இருந்து வெளியாகியுள்ளது! அங்கு ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 7 வயது சிறுவன் ஒருவன், அதன் விதை எதிர்பாராதவிதமாக தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளான். ​இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்களுக்கு மிக முக்கியமான அவசர எச்சரிக்கை ஒன்றைக் விடுத்துள்ளனர்…. ​ விதையோடு கொடுக்க வேண்டாம் – சிறு

ரம்புட்டான் பழத்தினது விதை தொண்டையில் சிக்கி கெப்பற்றிபொலவை சேர்ந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு Read More »

ஆளுநர் தலைமையில் வீடமைப்பு உதவி

கிழக்கு மாகாண  ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், திருகோணமலை மாவட்டத்தில் முதல் கட்டமாக, வீட்டு வசதி உதவித்தொகை பெறும் 34 பயனாளிகளுக்கு, ஆளுநர் அலுவலகத்தில் இன்று (24) மூன்று இலட்சத்தி ஐம்பதாயிரம் (350,000) மதிப்புள்ள காசோலைகளை கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியது. இந்தத் திட்டம் மாகாணத்தின் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில், முதல் கட்டமாக 34 பயனாளிகளுக்கு வீட்டு வசதி உதவித்தொகை காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும், எதிர்காலத்தில்

ஆளுநர் தலைமையில் வீடமைப்பு உதவி Read More »

ISFTA-வின் 25 ஆண்டுகள் – வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சியின் அடுத்த அலைக்கு வலுசேர்த்தல்

ISFTA-வின் 25 ஆண்டுகள் – வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சியின் அடுத்த அலைக்கு வலுசேர்த்தல் இந்திய உயர்ஸ்தானிகரகம், கொழும்பு, மற்றும் இந்தியா–இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (ILCCI) இணைந்து, 2026 ஜூன் 23 அன்று கொழும்பில் “ISFTA-வின் 25 ஆண்டுகள் – வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சியின் அடுத்த அலைக்கு வலுசேர்த்தல்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்வு, 2000 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்தியா–இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்

ISFTA-வின் 25 ஆண்டுகள் – வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சியின் அடுத்த அலைக்கு வலுசேர்த்தல் Read More »

முதியோர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவை

ஹஸ்பர் ஏ.எச்- தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தம்பலகாமம் தெற்கு முதியோர்களுக்கான உளநலம் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பிலான விழுப்புணர்வும் யோகா பயிற்சியும் இன்று (24.06.2026) வழங்கிவைக்கப்பட்டது. தம்பலகாமம் கிராம சேவகர் கட்டிடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை தம்பலகாமம் பிரதேச செயலகம் மாற்றும் முதியோர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் வளவாளர்களாக கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழாம் இணைந்து திறம்பட யோகா பயிற்சி உடல் ஆரோக்கியம், உணவுப்பழக்கங்கள் தொடர்பிலான விடயங்களை தெளிவூட்டினர்.

முதியோர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவை Read More »