• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்: திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்: திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல்

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் தமிழினப்படுகொலை வாரத்தை முன்னிட்டு, இனவழிப்பிலிருந்து உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.


இறுதிக்கட்டப் போரின் போது பசியால் வாடிய தமிழ் மக்களின் உயிரைக் காத்த குறியீடாக விளங்கும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி”, பொதுமக்களுக்குக் காய்ச்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு, போரின் போது உயிரிழந்த உறவுகளுக்குத் தமது அஞ்சலிகளையும் நினைவேந்தல்களையும் செலுத்தினர். தமிழர்களின் வரலாற்றையும், அவர்கள் கடந்து வந்த வலிகளையும் இளைய தலைமுறைக்குக் கடத்தும் நோக்கில் இத்தகைய கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனவழிப்பிலிருந்து உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தது.
காயத்திரி கிராமத்திலுள்ள கௌரி அம்மன் கோவில் முன்னலில் கஞ்சி காச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராசா துசானந்தன் அவர்களது ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

Share the Post: