முல்லைத்தீவு – திருமுறிகண்டிப் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 22 வயதுடைய இளம் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
திருமுறிகண்டி பகுதியைச் சேர்ந்த சுமித்திரா (வயது 22) என்ற மாணவியே இவ்வாறு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தவராவார்.
நேற்று வழக்கம்போல் தனது வீட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில், எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே இருந்த கிணற்றினுள் தவறி விழுந்துள்ளார். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அயலவர்களும் அவரை உடனடியாக மீட்கப் போராடியபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சுமித்திரா உயர்கல்வியில் பல்வேறு இலக்குகளோடும் கனவுகளோடும் பயணித்து வந்த ஒரு திறமைமிக்க மாணவி எனப் அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எதிர்பாராத இந்த திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.




