• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டு நீதிமன்றில் வைத்தியர் சுகுணன் எம்.பி அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிழல் நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்–

மட்டு நீதிமன்றில் வைத்தியர் சுகுணன் எம்.பி அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிழல் நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்–

(கனகராஜா சரவணன்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கிஜா பிரச்சனை தொடர்பாக பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (22) நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா என தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார்.

கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர் நியமிக்கப்பட்டவர்கள் கிஜா உடை அணிவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது இதன் போது வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் எதிராக முகநூல் ஊடாக தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் தொடர்பாக பதிவிடப்பட்டது

இது தொடர்பாக வைத்தியர் கு.சுகுணன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹீம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை (21) வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணத்துரை தரஷ்சினி திறந்த நீதிமன்றில் விசாரணைணக்காக எடுத்து கொண்டபோது வழக்காளி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், மற்றும் கனகலிங்கோம் கிசோபனா ஆஜராகிய சமர்பணத்தை முன்வைத்தனர் இதன்போது  குறித்த வழக்கை நிபந்தனைக்கு உட்டபட்ட கட்டளையை பெறுவதா இல்லையா தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்மைக்காலமாக கிழக்கு  மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் பார்க்க முடிகின்றது – களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத் தலைவர்.