இவ் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் முதன்மை அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், சிறப்பு அதிதியாக மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் கா.செந்தில்குமார் கலந்துகொண்டதுடன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், கழக ஆலோசகர்கள், பெருந்திரளான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, தொடரில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கான சாம்பியன் கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரவும், பிரதேசத்தில் விளையாட்டு ஒற்றுமையை வலுப்படுத்தவும் டொல்பின் விளையாட்டுக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த கிரிக்கெட் தொடர், இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








